கிழக்கு பல்கலைக்கழகம் இரண்டாவது தடவையாக சுற்றிவளைப்பு

Report Print Navoj in சமூகம்

கிழக்கு பல்கலைக் கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இரண்டாவது தடவையாக இராணுவத்தினர் இன்று பலத்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது சந்தேகத்துக்கிடமான எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை.

பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதற்கு ஏதுவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வேண்டிக்கொண்டதற்கிணங்க இச்சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக பதிவாளர் பகிரதன் தெரிவித்தார்.

பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் இராணுவத்தினா் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக் கழக மாணவர் விடுதிகள் சோதனையிடப்பட்டன.

இதேவேளை பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவானது மீண்டும் பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கான திகதியினை வழங்காமையினால் கிழக்கு பல்கலைக் கழத்தின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லையெனவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை தொடர்ந்து மக்கள் பீதி அடைந்து காணப்படுகின்றனர். இந்நிலையில் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.