தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் சஹ்ரான் ஹசிமின் நிதி முகாமையாளர் எனக் கூறப்படும் நபரை விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது வங்கிக் கணக்கிற்கு கடந்த காலங்களில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு மொழியை கற்பிக்கும் விரிவுரையாளரான இவர், காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.