திருகோணமலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை காளிகோவிலுக்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய முஸ்லிம் பெண்ணொருவரை இன்று கைது செய்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திருகோணமலை நகரிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காளி கோவிலுக்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய வேளையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.