பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு விசா தடை

Report Print Steephen Steephen in சமூகம்
256Shares

இலங்கையில் இருக்கும் பயங்கரவாத சந்தேக நபர்கள் இரகசியமான முறையில் வெளிநாடு செல்வதை தடுக்க விசா தடையை அமுல்படுத்த கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் தீர்மானித்துள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் தற்போது 45 நாடுகளின் தூதரங்கள் மற்றும் உயர்தானிகராலயங்கள் இயங்கி வருகின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் சர்வதேச பாதுகாப்புக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதால், அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர் என கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்த கொழும்பில் உள்ள ராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்மானத்தை இலகுவாக அமுல்படுத்துவதற்கான தற்போது அரசாங்கத்திடம் இருக்கும் பயங்கரவாதிகளின் பெயர் விபரங்களை இரகசியமான ஆவணமாக தூதரகங்களுக்கு வழங்குமாறும் ராஜதந்திரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயங்கரவாதத்தை அடக்கும் நடவடிக்கைக்கு உதவும் வகையில், இந்த விசா தடையை அமுல்படுத்த தூதரகங்கள் தீர்மானித்துள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.