வவுனியா வர்த்தக நிலையங்களில் விபரங்கள் சேகரிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் விபரங்கள் சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக இவ்விபரங்கள் சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர், முகவரி , அடையாள அட்டை இலக்கம் தேசிய அடையாள அட்டையின் பிரதி என்பன பாதுகாப்பு நடவடிக்கைக்காக வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களின் விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கை குறித்து வர்த்தகர் சங்கத்தினரிடம் வினவியபோது நகரின் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், மற்றும் ஊழியர்களை உறுதிப்படுத்துவதற்காக இவ்விபரங்கள் அடங்கிய கோவையினை வர்த்தக நிலையங்களுக்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளவரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் காண்பிக்குமாறும் வவுனியா பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வர்த்தகர் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சில நாட்களுக்குள் வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து வர்த்தகர் சங்கத்திற்கு வழங்குவதினால் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.