ஒன்றிணைந்த விடுதலை அமைப்புக்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக ஒன்றிணைந்த விடுதலை அமைப்புக்களின் ஏற்பாட்டில் 21ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள்புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, ஈழப்புரட்சி அமைப்பு. ஆகியவற்றின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றிருந்தது.

காலை 10.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆத்மசாந்தி தீபம் ஏற்றபட்டு, மலரஞ்சலி செலுத்தபட்டதுடன், குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மூன்று நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தபட்டுள்ளது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வவுனியா நகரசபை தலைவர், வவனியா தமிழ் தெற்கு தமிழ்பிரதேசசபையின் தலைவர் பொதுமக்கள் மதகுரு என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.