மாவெளி கங்கைக்கு நீராடசென்ற சிறுவன் சடலமாக மீட்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

நாவலபிட்டிய மாவெளி கங்கைக்கு நீராடசென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலபிட்டிய மாகும்புர பகுதியை சேர்ந்த மொகமட் உஸ்மாத் என்ற 17 வயதுடைய சிறுவனே இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

மேலும் நண்பர்களுடன் நீராட சென்ற சிறுவன் மாவெளி கங்கையின் ஆழமான பகுதியில் சுழியில் மாட்டி அடித்து செல்லப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சேலம்பிரிஜ் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனின் சடலம் நாவலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக நாவலபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.