துறைநீலாவணைக் கிராமத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம்

Report Print Nesan Nesan in சமூகம்

மட்டக்களப்பு - துறைநீலாவணைக் கிராமத்தில் 45 இலட்சம் ரூபா நிதியில் மூன்று வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் தெற்கு வாசலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, அண்ணா சனசமூக நிலைய வீதிக்கு கொங்கிறீட் வீதியாக செப்பனிடுவதற்கான ஆரம்ப நிகழ்வு மற்றும் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்ட ரான்ஸ்போமர் கிழக்கு வீதியை மக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் மக்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் நிகழ்வு தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத் தலைவர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மண்முனைத் தென் எருவில்பற்று பிரதேசசபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், பிரதேசபை உறுப்பினர் க.சரவணமுத்து மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.