யாழ். பச்சைப் பள்ளிவாசலில் பதற்றம்! களத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர்

Report Print Murali Murali in சமூகம்

யாழ். நாவாந்துறை நாவலர் வீதியில் உள்ள பச்சைப் பள்ளிவாசலில் இருதரப்பினருக்கு இடையேயான முறுகலால் இன்றிரவு அங்கு பதற்றம் ஏற்பட்டதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றிரவு 9.30 மணியளவில் பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவின் போது ஏற்பட்ட பிரச்சினையே முறுகலுக்கான காரணம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு விரைந்ததையடுத்து முரண்பாட்டில் ஈடுபட்ட இரு குழுக்களும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குழப்பம் விளைவித்த இரண்டு தரப்பினரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் பள்ளிவாசலை முற்றுகையிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் குழப்பத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரையும் பள்ளிவாசலுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்தோருக்கும் பள்ளிவாசலைச் சேர்ந்தோருக்கும் இடையிலேயே இந்த முரண்பாடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.