செஞ்சோலையில் வளர்ந்த பிள்ளைகளுக்கான மாதிரிக் கிராமத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Report Print Arivakam in சமூகம்

யுத்தத்தின் போது உறவுகளை இழந்து செஞ்சோலையில் வளர்ந்து கல்வி கற்ற ஒரு தொகுதி பிள்ளைகளுக்கான மாதிரி கிராமத்திற்கான அடிக்கல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாட்டி வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு கல்மடு நகரில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மாதிரி கிராமத்திற்கு சோலை மாதிரிக்கிராமம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட செஞ்சோலை பிள்ளைகளின் கருத்துரைகள் பலரையும் கண்கலங்க வைத்தது. யுத்தத்தால் அனைத்து உறவுகளையும் இழந்து நிர்க்கதிக்குள்ளானவர்கள் நாம்.

அதன் பின்னர் நாங்கள் ஒருவீட்டுப்பிள்ளைகளாக அருட்சகோதரியோடு வாழ்ந்தவர்கள் நாங்கள். எதிர்காலத்திலும் அவ்வாறே அனைவரும் அருகில் ஒன்றாக வாழ்வதற்கு உறவுப்பாலமாக இருந்து எமக்கு இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு தங்களின் நன்றியைத் தெரிவித்தார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அமைய செயற்பட்ட பிரதேச செயலாளர் வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்கள்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் உதவிப் பிரதேச செயலாளர் வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் கண்டாவளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ச. ஜீவராசா அருட்சகோதரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.