தற்கொலை குண்டு தாக்குதலின் எதிரொலி! இலங்கையர் உள்ளிட்ட 13 பேர் தமிழகத்தில் கைது

Report Print Murali Murali in சமூகம்

மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட 13 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போலிக்கடவுச் சீட்டு தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போலிக்கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்யைில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலின் எதிரொலியாக தமிழகத்தில் பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.