இலங்கையில் பெற்றோரிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

Report Print Sujitha Sri in சமூகம்

சில சிறுவர்களிடம் உடலியல் ரீதியான தாக்க நிலைமைகளை அவதானிக்க கூடியதாக உள்ளது என சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலங்கையில் நிலவிய அசாதாரண நிலைமையை மறந்து பிள்ளைகள் வழமையான வாழ்க்கை நிலைக்கு திரும்ப வழியேற்படுத்த வேண்டும் எனவும் அவர் பெற்றோரிடம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இதேவேளை இலங்கையில் தற்போதைய பாதுகாப்பு தொடர்பில் கேள்வியெழுப்பும் சிறுவர்களிடம் அவர்களின் அச்ச மனப்பான்மையை போக்கும் வகையில் விடையளிக்க வேண்டும்.

உடல் சோர்வு, உணவு உட்கொள்ள இயலாமை, உறக்கமின்மை போன உடலியல் தாக்கங்களே சிறுவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன.

பாடசாலை விடுமுறைக் காலம் அதிகரிக்கப்பட்டமையும் இவ்வாறான தாக்கங்கள் ஏற்பட காரணமாகியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.