மைத்திரியின் மகனின் திருமணத்தில் விதிக்கப்பட்ட தடை!

Report Print Vethu Vethu in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனின் திருமணத்தின் போது கைத்தொலைபேசிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேனவின் திருமண நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கைத்தொலைபேசிகளை வைத்திருக்க அனுமதி வழங்கப்படவில்லை.

முன்னதாக ஷங்ரி-லா விடுதியிலேயே நடக்கவிருந்த இந்த திருமணம், அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து. ஹில்டன் விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்த திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். அரசியல்வாதிகள் எவரும் அழைக்கப்படவில்லை.

திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடம் இருந்து, ஹோட்டலுக்குள் நுழைய முன்னரே, கைத்தொலைபேசிகளை ஒப்படைத்து விட்டு செல்லுமாறு கேட்கப்பட்டனர்.

ஜனாதிபதியின் வீட்டுத் திருமணம் தொடர்பான எந்தவொரு புகைப்படங்களும் ஊடகங்கள் வாயிலான வெளிடப்படவில்லை. அதனை தடுக்கும் வகையிலேயே கைத்தொலைபேசிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான அதிரடி படையினர் ஹில்டன் ஹோட்டலைச் சுற்றி பாதுகாப்புக்காக வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.