கிண்ணியா சுற்றிவளைப்பில் 8 பேர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா மற்றும் ரொட்டவெவ பகுதிகளில் முப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அடையாளத்தை உறுதிப் படுத்த தவறிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்கிண்ணியா - பெரியாற்று முனை போன்ற பகுதிகளில் 2500 க்கும் மேற்பட்ட முப்படையினர் குவிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது எவ்வித வெடிபொருட்கள் மீட்கப்படவில்லை எனவும், சுற்றிவளைப்பின்போது அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அரபிக் கல்லூரிகளில் பயன்படுத்தும் 20 அரபு புத்தகங்களையும் பிடி போடப்பட்ட ஆறு அங்குலம் கொண்ட இரும்பு பட்டி ஒன்றினையும், 20 லிட்டர் கேன் ஒன்றில் கெமிக்கல் திரவியங்களையும் காட்டுப் பகுதியில் மீட்டுள்ளதாகவும் வீட்டில் வைத்திருப்பதற்கு பயத்துக்காக காட்டுக்கு கொண்டு சென்று வீசி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனாலும் கைப்பற்றப்பட்ட 20 அரபு புத்தகங்களும் அரபு கலாசாலைகளில் கற்பிப்பதற்கு பாவிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை கிண்ணியா பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அவர்களின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.