பேருந்துடன், ஜீப் ரக வாகனம் மோதி விபத்து

Report Print Satha in சமூகம்

கோட்டை - மஹல்வராவ பிரதேசத்தில் ஜீப் ரக வாகனமொன்று, அரச பேருந்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஜீப் ரக வாகனத்தின் சாரதி உட்பட இருவரே உயிரிழந்துள்ளதுடன், இவர்கள் மீகொடை - பனாலுவ பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.