பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிப்பு

Report Print Eelam Ranjan Eelam Ranjan in சமூகம்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட சொந்தங்களை நினைவுகூரும் முகமாக பிரித்தானியாவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பிரித்தானிய பிரதமரின் வாயிற்தளத்திற்கு முன்பாக நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வு ஆரம்பமானது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய தமிழ் அமைப்புகளுடன் இணைந்து இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக சங்கவி ஏற்றி வைத்துள்ளதோடு, போராளி ஈசன் பொன்னுச்சாமியினால் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

பொதுச்சுடரினை மகேந்திரன் ஏற்றிவைத்ததோடு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியகொடி மற்றும் தமிழீழ தேசியக்கொடி கையேந்தல் நடைபெற்று அடையாள உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.