நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு

Report Print Satha in சமூகம்

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சமடைய தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்தன் பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாட்டு மக்கள் அச்சமடைவதற்கான சந்தர்ப்பம் இல்லை. பாடசாலை தொடர்பான நிலைமையின் போது பெற்றோர் தரப்பிலிருந்து பார்க்கும்போது, தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அவர்கள் அதிக அவதானத்துடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில், பாதுகாப்புக்கு குறைவான ஒரு சந்தர்ப்பம் இல்லாதமையினால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்பதையே தன்னால் கூறமுடியும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில், முப்படையினர், பொலிஸார், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோரை இணைத்து கொண்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

Latest Offers

loading...