சிலாபத்தில் ஊரடங்கு சட்டம் நேரத்தில் மாற்றம்

Report Print Malar in சமூகம்

அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு சிலாபம் பகுதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிலாபம் பகுதியில் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை அதிகாலை 4 மணியளவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தற்போது தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.