யாழ்ப்பாணம் செல்கிறது நீதிபதி இளஞ்செழியனுடைய தகப்பனாரின் பூதவுடல் தாங்கிய வாகனம்

Report Print Sujitha Sri in சமூகம்

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடல் தாங்கிய வாகனம் இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளது.

இதேவேளை நாளை முதல் நாளை மறு தினம் வரையில் யாழ். கொக்குவில் மேற்கு, கேணியடியிலுள்ள அன்னாரின் புதல்வரான யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறையனின் இல்லத்தில் சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு, பூதவுடல் அவர் பிறந்த இடமான வேலணைக்கு எடுத்து செல்லப்பட்டு ஒரு சில மணித்தியாலங்கள் அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் சாட்டி இந்து மயானத்தில் தகன கிரியைகள் நடத்தப்படவுள்ளன.

Latest Offers