கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு காவல் நிற்கும் பௌத்த தேரர்?

Report Print Jeslin Jeslin in சமூகம்

அண்மையில் பாரிய குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்திற்கு ராகுல ஹமி தேரர் விஜயம் செய்துள்ளார்.

அங்கு சென்ற அவர் ஆலயத்தின் புனர் நிர்மாண பணிகளைப் பார்வையிட்டதோடு, அருட்தந்தையர்களோடு கலந்துரையாடியுள்ளார்.

மேலும், அவருடன் இணைந்து மற்றுமொரு தேரரும் அங்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் இனிமேல் இதுபோல நடக்காமல் இருப்பதற்கு நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதுடன், ஆலயத்திற்கு காவல் இருப்பது போல அவர் இருக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.