நாட்டின் நல்லாசி வேண்டி ஓட்டமாவடி பள்ளிவாசலில் பிரார்த்தனை

Report Print Navoj in சமூகம்

ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் ஏற்பாட்டில் ஆறாவது கஜபாகு படை வீரர்களின் 29 நினைவு தினத்தினை முன்னிட்டும், நாட்டின் நல்லாசி வேண்டியும் துஆப் பிரார்த்தனை இன்று நடைபெற்றது.

ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.எல்.ஏ.ஜுனைட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆறாவது கஜபாகு படைப்பிரிவின் கெப்டன் எஸ்.ஜெயவீர, கல்குடா உலமா சபைத் தலைவர் மௌலவி.ஏ.எல்.இஸ்மாயில், இராணுவத்தினர், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆறாவது கஜபாகு படையணியின் 29வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு நாட்டுக்காக உயிர்நீர்த்த இராணுவ வீரர்களுக்கும், நாட்டின் அமைதி வேண்டியும் துஆப் பிரார்த்தனையை பள்ளிவாசல் பேஸ்இமாம் மௌலவி.ஏ.எல்.எம்.முஸ்தபா நிகழ்த்தினர்.

பிரார்த்தனையில் கலந்து கொண்ட முஸ்லிம் மக்கள் மற்றும் இராணுவத்தினர் நல்லுறவை பேணும் வகையில் கைகுலுக்கி அரவணைத்து கொண்டனர்.