சேருநுவர காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் இன்று காலை மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டுக்குச் சென்ற பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து இந்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூதூர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றப் பின்னர் குறித்த குண்டினை செயழிக்கச் செய்யும் நடவடிக்கைகள் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.