ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்களை சேகரிக்க சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.

பெற்றோரை இழந்து அனாதைகளான பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக அவர்களின் தகவல்களை திரட்டி வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கூறியுள்ளது.

இப்படியான பிள்ளைகள் பற்றி தகவல்கள் இருந்தால், 011-2444444, 011-2337041, 011-2337039 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.