சிலாபத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு என்ன காரணம்! வெளிவரும் பின்னணி

Report Print Jeslin Jeslin in சமூகம்

முகப்புத்தக பதிவு குறித்து பொலிஸார் கண்டு கொள்ளாமையே இன்று சிலாபத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சிலாபம் காரியாலயம் என கூறப்படும் வட்டக்குளிய பகுதியில் உள்ள வீட்டுக்கு இன்று சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் அங்கு பதற்றமான சூழல் நிலவியதுடன், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல் படுத்தப்பட்டது.

முகநூலில், இன்னும் சில நாட்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் ஒன்று பரவியதை அடுத்து இந்த கலவரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முகநூல் பதிவு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிலாபம் பொலிஸ் நிலையத்தில் சிலர் முறையிட்டுள்ளனர்.

எனினும் அதனை பொலிஸார் கண்டுகொள்ளாததன் காரணத்தில் குறித்த கலவரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வீதி தோறும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் சென்ற இளைஞர்கள் கடைகளை மூடுமாறு தகராறு செய்ய ஆரம்பித்ததனால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.