பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: பொலிஸார்

Report Print Steephen Steephen in சமூகம்

பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அன்றாட இயல்பு வாழ்க்கையை வழமை போல் கொண்டு நடத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இயல்பு நிலைமை ஏற்படுத்தி, கூடியளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 13 ஆம் திகதி தாக்குதல்கள் நடக்கலாம் என்று கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பாகவும் அவதானத்துடன் இருந்து வருகிறோம்.

எந்த தகவல்களை நாம் புறம்தள்ள மாட்டோம். எனினும் இந்த தகவல்களை புலனாய்வு பிரிவினர் உறுதிப்படுத்தவில்லை.

எனினும் நாடு முழுவதும் அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.