தென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தபோதும் பாடசாலைகள் இடம்பெற்றன

Report Print Theesan in சமூகம்

தென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் இடம்பெற்ற போதும் பாடசாலைகள் நடந்தது என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக இன்று சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது விமானத்தாக்குதல், செல் தாக்குதல் என்பன நடந்தாலும் வடக்கு, கிழக்கிலே மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார்கள்.

தென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள், விமானத்தாக்குதல்கள் போன்ற தாக்குதல்களுக்கு மத்தியிலும் பாடசாலை நடைபெற்றது.

ஆனால் இப்போது அரசியல் ரீதியான ஒரு விசமத்தனமான பிரச்சாரம் காரணமாகத்தான் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லவில்லை என்பது தான் எங்களுடைய கருத்து.

ஆகவே இந்த வாரத்திலே அதற்கான நிலைமைகள் முன்னேற்றமடையும். இருந்தாலும் பல்கலைக்கழக மாணவர்களின் கைது போன்றன பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களையும் விடுதலை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மக்கள் தன்னெழுச்சியாக பல்லாயிரக்கணக்காக ஒன்று திரழ்வார்கள் திரழ வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஐ முன்னிட்டு நடைபெற்ற இன படுகொலையை நினைவு கூறும் வகையில் இன்று கிளிநொச்சியில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்சவின் காலத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் இருந்தது. அக்கால பகுதியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாம் நடாத்தினோம்.

இன படுகொலைகள் இடம்பெற்ற பகுதிகளில் அங்சலிகளை தாம் செலுத்தி வருவதாகவும் ,பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால சட்டம் என்பவற்றின் ஊடாக அரசு தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தடைகளையும் இட முடியும். அவற்றை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் ,அதேபோன்று இதையும் நடாத்துவோம். மக்கள் அச்சமின்றி ஒன்று திரளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வன்னி குறோஸ் தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா கற்குழி வீதியில் அமைந்துள்ள வன்னி குறோஸ் அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

வன்னி குறோஸ் தாயக நினைவேந்தல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவப்பிரகாசம் சிவமோகன் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி கொழுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து உயிர்நீத்த மக்களுக்காக மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் இளைஞர் ,யுவதிகள் , பொதுமக்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers