செம்மண்ணோடை பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

Report Print Navoj in சமூகம்

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் செம்மண்ணோடை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

இதன்போது வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை வீதி செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கும், இவருக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும், குறித்த சந்தேக நபர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, கொழும்பு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.