முஸ்லிம்கள் மீது அத்துமீற இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றதா?அய்யூப் அஸ்மின்

Report Print Rakesh in சமூகம்

சிலாபத்தில் இன்று கலகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அய்யூப் அஸ்மின் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது முஸ்லிம்கள் மீது அத்துமீற இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வர்த்தகர் ஒருவர் இட்ட முகநூல் பதிவொன்றைத் தவறாக விளங்கிக்கொண்ட இளைஞர் குழு சிலாபம் நகரில் இன்று குழப்பத்தை விளைவித்துள்ளது.

அதன் பின்னர் அங்கு நிலவிய பதற்றத்தையடுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, முகநூலில் பதிவை இட்ட வர்த்தகரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.