களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை வைத்திய நிபுனர்களின் இடமாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை வைத்திய நிபுனர்களின் இடமாற்றம் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலுள்ள வைத்திய நிபுனர்களின் இடமாற்றம் காரணமாக அவ்வைத்தியசாலையில் வைத்திய நிபுனர்கள் பற்றாக்குறை நிலவும் நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில், ஆராயும் முகமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இராசமாணிக்கம் அறக்கட்டளையின் தலைவர் இரா.சாணக்கியன் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்திய நிபுனர்களின் இடமாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள வைத்திய நிபுனர்கள் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்திய நிபுனர்களின் இடத்தினை நிரப்பும் முகமாக வைத்திய நிபுனர்களை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வைத்திய நிபுனர்கள் சங்கத் தலைவர் வைத்திய மதனழகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.