முகமாலை பகுதியில் மனிதாபிமான கண்ணி வெடியகற்றும் நடவடிக்கை

Report Print Yathu in சமூகம்

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணி வெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் தனியார் நிறுவனம் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 மே மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் (802,206) சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து (18,082) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக தனியார் நிறுவனம் நடவடிக்கை முகாமையாளர் கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்தும் இந்நிறுவனம் கண்ணி வெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...