நாவல பகுதியில் பொது மகன் ஒருவர் மீது தாக்குதல்

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு - நுகேகொட, நாவல பகுதியில் நேற்று பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த சிலர் குறித்த பொதுமகனை தாக்கியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாவல வீதி ஒன்றில் இருந்து தமது வீடு இருக்கும் ஒழுங்கையில் சென்றுக்கொண்டிருந்தபோது. சிலர், குறித்த பொதுமகனிடம் அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு கேட்டு தம்மை தாக்கியதாகவும், தர மறுத்தமையினாலேயே தம்மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.