கந்தளாயில் பரிசோதனை நடவடிக்கை தீவிரம்

Report Print Mubarak in சமூகம்

இலங்கையின் அண்மைய பயங்காரவாத தாக்குதலையடுத்து திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கந்தளாய் பிரதேசத்தில் இன்று சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கிடைக்கின்ற தகவலுக்கமைய வீடுகளின் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின் போது பயங்கரவாதி சஹ்றானின் இருவட்டினை வைத்திருந்த ஒருவரையும், வாள்கள் வைத்திருந்த நால்வரும் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.