நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்பு

Report Print Yathu in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் இந்திராபுரம் பகுதியில் தார் வீதி அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி நாடாளுமன்ற உறுப்பினரின் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இவ்வீதியை புனரமைத்து தருமாறு தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனிடம் அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த வீதி தெரிவு செய்யப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த வீதிக்கான அடிக்கல்லை இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளருமான சுப்பிரமணியம் சுரேன் நாட்டி வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உப தவிசாளர் கஜன் ,உறுப்பினர் ரமேஷ் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.