வவுனியாவில் சர்வதேச அன்னையர் தின நிகழ்வு!!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நாற்சதுர சுவிசேச சபை ஆலயத்தில் தலைமை போதகர் பி.என்.சேகர் தலைமையில் அன்னையர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச அன்னையர் தினமான இன்று தாய்மார்களை கௌரவிக்கும் முகமாக வயதான தாயார் ஒருவருக்கு ஆலயத்தின் தலைமை போதகரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், அனைத்து அன்னையருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தாய்மார்கள் அனைவரையும் கௌரவப்படுத்தும் முகமாக விசேட ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.