பெறுமதியான தொலைபேசியை திருடியவர்களுக்கு விளக்கமறியல நீடிப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெறுமதியான அழைபேசி இரண்டினை திருடிய நால்வரை இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக இன்றைய தினம் உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இரண்டு அலைபேசிகளும் ஒன்றரை இலட்சம் பெருமதியானவற்றை வீடொன்றில் திருடி பாவித்து வந்துள்ளனர்.

இந் நிலையில் அழைபேசியின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நான்கு சந்தேக நபர்களை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers