திருகோணமலையில் பஸ் மீது கல்வீச்சு நடத்தியவருக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் அரச பஸ்களுக்கு கல்வீச்சு நடாத்தி அரச சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு முன்னிலையில் (இன்று 12ஆம் தேதி மாலை) ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த ரத்னவீர பட்டபெந்திப்கே சனத்குமார (34வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் சில பகுதிகளில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்ட போது பிரயாணிகளை ஏற்றிச் சென்ற அரசுக்குச் சொந்தமான பஸ் மீது ஐந்தாம் கட்டைப் பகுதியில் கல் வீச்சு நடாத்தி பஸ்ஸின் கண்ணாடிகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் பிரதம நீதவான் சுபாஷினி சித்திரவேலுவின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அடையாள அணிவகுப்பிற்கு தயார்படுத்துமாறும் சீனக்குடா பொலிசாருக்கு நீதவான் கட்டளையிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers