நாட்டின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள்! சமூகவலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்

Report Print Vethu Vethu in சமூகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

குளியாப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் வட்ஸ்அப், வைபர், IMO,Snapchat, இன்ஸ்ட்ராகிராம் மற்றும் YouTube ஆகிய சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இன்று காலை அறிவித்துள்ளது.