பூண்டுலோயாவில் கோர விபத்து - தங்கை ஸ்தலத்தில் பலி - ஆபத்தான நிலையில் அக்கா

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா - பூண்டுலோயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பூண்டுலோயா வீதியில் நேற்று மாலை இரு முச்சக்கர வண்டிகள் மோதி, குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி, அக்கா மற்றும் தங்கை ஆகியோரில் தங்கை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, சாரதி மற்றும் அக்கா ஆபத்தான நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கரமலை பிரிவைச் சேர்ந்த சந்திரமோகன் சாலினி எனும் 16 வயதுடைய யுவதியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களை கம்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த யுவதியின் சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், சாரதியை பொலிஸார் கைது செய்வதாக தெரிவித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers