மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு வந்த நிதி தொடர்பில் அறிக்கை சமர்பிக்க உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தை அமைக்க, வெளிநாட்டு நிதிகள் இலங்கையின் உள்ளூர் வங்கிகளுக்கு வந்தமை தொடர்பில் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து இந்த பல்கலைக்கழக அமைப்புக்காக 3600 மில்லியன் ரூபாய்கள் நான்கு உள்ளூர் வங்கிகளின் ஊடாக பெறப்பட்டுள்ளன.

ஹிரா நிதியம் என்ற அமைப்பின் கணக்குகளுக்கே இந்த பணம் வந்துள்ளது.

இந்த நிதியத்தின் தலைவராக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் மகன் பணியாற்றுகிறார்.