கிளிநொச்சியில் பலத்த பாதுகாப்பு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்

Report Print Yathu in சமூகம்

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகளில் இன்று 1 முதல் 5 வரையான வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து 2ஆம் தவணைக்காக பாடசாலைகளை திறப்பதில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.

கடந்த வாரம் தரம் 6 முதல் உயர்தரம் வரையான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு, இன்று 1 முதல் 5 வரையான வகுப்புக்கள் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பமாகியுள்ளன.

பாடசாலைகளில் விசேட அதிரடிப்படையினரும், படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.