பெருந்தொகையான இருவெட்டுகளுடன் ஊடகவியலாளர் ஒருவர் கைது

Report Print Satha in சமூகம்

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதய மாவத்தை பகுதி வீடொன்றிலிருந்து 235 இருவெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர் இருவெட்டுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 55 வயதுடைய எனவும் கைப்பற்றப்பட்ட இருவெட்டுகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.