தீவிரவாத தாக்குதல் தொடர்பில் 15 வருடங்களுக்கு முன்னரே எச்சரித்த விடுதலைப் புலிகளின் அதி முக்கியஸ்தர்

Report Print Jeslin Jeslin in சமூகம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் 15 வருடங்களுக்கு முன்னரே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சாளர் அண்டன் பாலசிங்கம் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்திருந்தார் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் அண்டன் பாலசிங்கம் பேச்சுவார்த்தையின்போது இலங்கை அரசாங்கத்திற்கு சில புலனாய்வுத் தகவல்களை வழங்கியிருக்கின்றார்.

அதாவது கிழக்கில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தங்களது செயற்பாட்டை மேற்கொள்ளவும் பயிற்சி முகாம்களை அமைக்கவும் ஆயுதங்களை வைத்திருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்து எச்சரித்திருந்தார்.

இன்னுமொரு விடயம் உள்நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் கடல் வழிப்பாதைகள், விமானப்பாதைகள் நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது ஒட்டுமொத்தமாக மாற்றமடைந்திருந்தது.

அப்போது தீவிரவாதிகளின் ஊடுருவல் மிகக் கடினமானதாகவே இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்க கிடைத்திருந்த நிம்மதி அவர்கள் சுவாசித்த சுதந்திரக் காற்று இந்த தீவிரவாதிகளுக்கு இடமளித்திருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.