கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற நபர்கள் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரை கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற இருவரை இன்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்போபுர பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் வான்எல பகுதியிலிருந்து கந்தளாய் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அரை கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers