பதற்றநிலை ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம்

Report Print Satha in சமூகம்

பதற்றநிலை ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிப்பொல மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குளியாபிட்டி பகுதியில் நேற்று ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றும் குறித்த பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.