லண்டனில் இரண்டாம் நாளாக தொடரும் போராட்டம்

Report Print Eelam Ranjan Eelam Ranjan in சமூகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு லண்டனில், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றுள்ளது.

இதன்போது ஈகைச் சுடரை பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்ததோடு, அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றுள்ளது.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலே கொள்ளப்பட்ட உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி வாரமானது கடந்த 11ஆம் திகதி தொடங்கி, நேற்று இரண்டாவது நாளாக தமிழீழ உணர்வாளர்களால் சுழற்சிமுறையிலான அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி தங்களது தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பேரணி ஒன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.