குருணாகல் மாவட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்!! உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

Report Print Satha in சமூகம்

குருணாகல் மாவட்டத்தின், ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், குருணாகல் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஹெட்டிபொல பகுதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருணாகல், ஹெட்டிபொல நகரில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து அப்பகுதியல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் வேளையில் அங்கு சில குழுக்களினால் கடைகள், பொது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

குறித்த பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் நாளை காலை 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப் பகுதிகளில் உள்ள கடைகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சம்பவ இடத்தில் படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.