குடாநாட்டு மக்களுக்கு விசேட செய்தி ஒன்றை விடுத்துள்ள யாழ். கட்டளைத் தளபதி

Report Print Sumi in சமூகம்

யாழ். மாவட்ட மக்கள் எவ்வித பயமுமின்றி தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்ல முடியும் என, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து இன மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராய்ச்சி, யாழ். மாவட்ட மக்கள் எவ்வித பயமுமின்றி தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.