மனைவி மற்றும் மகளை தாக்கிய குடும்பஸ்தர் விளக்கமறியல்!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனைவி மற்றும் மகளை தாக்கிய குடும்பஸ்தர் ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்னாயக்க குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகளை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மதுரங்குடா, செந்தூர் பகுதியைச் 41 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தினமும் மதுபானம் குடித்து வீட்டுக்குச் சென்று மனைவி பிள்ளைகளை தாக்குவதாக பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Latest Offers