தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு கோவில்கள் அல்லது விகாரைகள்! மாகல்கந்தே சுதந்த தேரர்

Report Print Jeslin Jeslin in சமூகம்

தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாகல்கந்தே சுதந்த தேரர் ஆகியோருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.

சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.