மன்னார் பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வரவு குறைவு: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Report Print Ashik in சமூகம்

கடந்த மாதம் இடம் பெற்ற கொடூர தற்கொலை தாக்குதல் காரணமாக இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதுடன் நாடு முழுவதும் அவசர காலச்சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அரச அலுவலகங்கள் , ஆலயங்கள், பாடசாலைகள் முழுவதும் முப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கையும் இடம் பெற்றது.

அதே நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாக வேண்டிய பாடசலை இம்மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டதுடன் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே பாடசாலை ஆராம்பமானது.

இந்த நிலையில் இன்று தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை கற்கும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் ஆகியுள்ளது.

எனினும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வரவு மிகவும் குறைவடைந்துள்ளது.

அதே நேரத்தில் பாடசாலை முழுவது பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் பாதுகாப்புக்காக உதவி புரியும் ஊழியர்கள் உத்தியோகஸ்தர்களை தவிர வேறு யாரும் பாடசாலை நேரத்தில் பாடசாலைக்கு காரணம் இன்றி அனுமதிக்கப்படவில்லை.

வாகனங்கள் எவையும் பாடசாலை எல்லை பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்த பொற்றோர்களும் நுழைவாயில் வரை மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர்.

பாடசாலை முடிவடைந்த நிலையில் சில பாடசாலைகளில் பெற்றோர் வருகை தந்ததன் பின்னரே ஆரம்ப பிரிவு மாணவர்களை வீடு செல்ல அனுமதித்தனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இராணுவம் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் பாடசாலை நிர்வாகத்தினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers